Site icon Tamil News

மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் போட்டோ சூட்

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருடன் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி இன்று காலை நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து பிளாஸ்டிக் நெகிழிகளிடமிருந்து கடல் வாழ் உயிரினங்களை காப்போம் என பிளாஸ்டிக் நெகிழி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். அதனைத் தொடர்ந்து கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சேகரிக்க சென்றனர் ஆனால் அதற்கு முன்பே மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் கடற்கரையை தூய்மை படுத்தி இருந்தது, குப்பைககளே இல்லாத இடத்தில் குப்பைகளை சேகரித்தவாறு அதிகாரிகள் மாணவ மாணவியரை வைத்து போட்டோ சூட் எடுத்தது பார்ப்போரை முகம் சுளிக்க வைத்தது, இவற்றை பார்த்த சுற்றுலா பயணிகள் குப்பைகளே இல்லாத இடத்தில் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் சுட்டெரிக்கும் வெயிலில் பள்ளி மாணவ மாணவியரை ஏன் கடற்கரை மணலில் உட்கார வைத்தார்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.

Exit mobile version