Site icon Tamil News

பெட்ரோல் இன்றி மின்சாரமின்றி சூரிய ஒளியில் ஓடும் இருசக்கர வாகனம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் இயங்கி வரும் ராஜலட்சுமி தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் பெட்ரோல் விலை உயர்வால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோலின்றி மின்சாரமின்றி சூரிய ஒளியை கொண்டு இயங்கும் இருசக்கர வாகனம் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பை சூரிய சக்தியை கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை படைத்துள்ள சோலார் சுரேஷ் முன்னிலையில் கல்லூரி மாணவர்கள் விளக்கி காண்பித்தனர் வரவேற்கதக்க கண்டுபிடுப்பு என்று

இது குறித்து சோலார் சுரேஷ் கூறுகையில் மக்களுக்கு மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்புபெட்ரோலுக்கு மாற்றாக வந்துள்ள E பைக் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை குறிப்பாக

மற்ற எல்லா இருசக்கர வாகனங்களிலும் பயன்படுத்தப்படும் பேட்டரியில் எனர்ஜி ஆற்றல் இழப்பு ஏற்பட்டு மீண்டும் அதை ரீசார்ஜ் செய்யும் நிலை உள்ளது ஆனால்

இந்த இருசக்கர வாகனத்தில் சூரிய ஒளியில் நிறுத்தி வைக்கப்படும்போதும் ,இருசக்கர வாகனம் ஓடும்போதும் சார்ஜ் ஆவதால் பேட்டரியில் உள்ள ஆற்றல் சக்தி குறையாமல் கூடுவது சிறப்பம்சம் என்றும்

இந்த சூரிய ஒளி பேட்டரி பேனல் மூலம் சேமிக்கப்படும் ஆற்றலைகொண்டு இருசக்கர வாகனம் இயங்குவது மட்டுமில்லாமல் மின்சாரம் இல்லாத நிலையில் மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி ,மின்விளக்குகள் ,மோட்டார் உள்ளிட்டவற்றை இயக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார்

கல்லூரி மாணவர்கள் இது குறித்து கூறும்போது பெட்ரோல் ,மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விட மிகப்பெரிய செலவின்றி இந்த கண்டுபிடிப்பு ஏழை எளிய அனைத்து தரப்பு மக்களும் அன்றாடம் பயன்பெறும் வகையில் இந்தப் படைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் இந்திய இருசக்கர வாகன சந்தையில்

முன்னணி நிறுவனங்களுக்கு இணையாகதங்கள் படைப்பும் விரைவில் வெளிவரும் கல்லூரி மாணவர்களாகிய நாங்களும் படிக்கும்போது தொழில் முனைவோர்களாக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது

என்றும் அதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறுகின்றனர்

இந்த நிகழ்வில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் முதல்வர் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பொறியியல் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version