Site icon Tamil News

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு.

மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி உள்ளது.இங்கு 40க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த 2021 ஆண்டு கட்டிடத்தை முழுவதும் இடித்து  அப்புறப்படுத்தினர்.அங்கிருந்த மாணவர்களை அதே பகுதியில் வாடகை வீட்டில் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ₹40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை இதுவரைக்கும் தொடங்கவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

பள்ளியை உடனடியாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்துள்ளனர். ஆனால் இதுவரை பள்ளியை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை ஆதலால் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இரண்டாவது முறையாக புறக்கணித்து வருகின்றனர். இதனால் பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது.

உடனடியாக அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என புறக்கணித்து வருகின்றனர்.

Exit mobile version