Site icon Tamil News

நைஜீரியாவின் பெனு மாகாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் 74 பேரைக் கொன்று குவித்துள்ளது

நைஜீரியாவின் பெனு மாநிலத்தில்  இந்த வாரம் ஆயுதமேந்திய குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற  இருவேறு தாக்குதல்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகளும் காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

மேய்ச்சல்காரர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான வன்முறைகள் பொதுவாகக் காணப்படும் பகுதியில் சமீபத்திய மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை Mgban உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாமில் 28 சடலங்கள் மீட்கப்பட்டதாக பெனு மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர்கேத்தரின் அனீன் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கான காரணம்  என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் துப்பாக்கிதாரிகள் வந்து சுடத் தொடங்கியதாகவும், பலரைக் கொன்றதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.

Exit mobile version