Site icon Tamil News

முன்னெப்போதுமில்லாத அளவிற்கு சோமாலி தீபகற்ப நாடுகளில் உணவுப்பஞ்சம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட சோமாலி தீபகற்ப (HOA) நாடுகளில் எதிர்பாராத அளவு கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நீடிப்பதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.

அதன் சமீபத்திய (Horn of Africa) ஆப்பிரிக்காவின் கொம்பு என வர்ணிக்கப்படும் சோமாலி தீபகற்ப நாடுகளில் வறட்சி நிலைமைகள் குறித்த அறிக்கையில், உலக உணவுத் திட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகள், முக்கியமாக எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா ஆகியன இரண்டரை ஆண்டுகளாக கடுமையான வறட்சியை எதிர்கொள்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி தற்போது பல தசாப்தங்களாக மிகக் கடுமையான மற்றும் நீடித்த வறட்சியை அனுபவித்து வருவதாகவும், எத்தியோப்பியாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள், கென்யாவின் வறண்ட, அரை வறண்ட நிலங்கள் மற்றும் சோமாலியாவின் பெரும்பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கு இட்டுச் செல்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

சோமாலி தீபகற்ப ஆப்பிரிக்க பிராந்தியம் அதன் தொடர்ச்சியான வறட்சிகளுக்கு பெயர் பெற்றது, மக்கள்தொகை வளர்ச்சி, மேக்ரோ பொருளாதார ஏற்ற இறக்கம், தொற்றுநோய்கள், தீவிர வறுமை மற்றும் மோதல்கள் போன்ற பல்வேறு காரணிகளால் நிலைமை மோசமடைவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

Exit mobile version