Site icon Tamil News

தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசனம்

சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 19 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ பெருத்திருவிழா கடந்த 25 2 2023 அன்று கொடியேற்றத்துடன் விழா துவக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சந்திர பிரபை வீதி உலா மற்றும் காமாட்சி அம்மனுக்கு பால்குடம் வீதி உலா நடைபெற்றது அதை தொடர்ந்து இன்று காமாட்சி அம்மன் திருத்தேரில் அமைக்கப்பட்டு வீதி உலா ஜே பி கோயில் தெரு சஞ்சீவராயன் கோயில் தெரு பாலு முதலி தெரு ஆகிய பகுதிகளில் சுமார் மூன்று கிலோ மீட்டர் அளவுக்கு பக்தர்களுக்கு காட்சியளித்து ஊர்வலம் வந்தது

ஊர்வலத்தில் சிலம்பம் பறை இசை குதிரை பூட்டிய அணி வகுப்பு உடன் காமாட்சி அம்மன் திருத்தேரில் பவனி வந்தார் இதை காண 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தெருவோரம் கூடியிருந்தனர் முழுக்க முழுக்க பெண்களால் தேர் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் தவமணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அவரும் தேரை வடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது

இதற்கான ஏற்பாட்டை ஸ்ரீ காமாட்சி அம்மன் 24 மனை தெலுங்கு செட்டியார் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

Exit mobile version