Site icon Tamil News

துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக பொருத்திய வைத்தியர்கள்

4 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் உடலிலிருந்து பிரிக்கப்பட்ட கை வெற்றிகரமாக மாற்றப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில் உறவினர்களுக்கிடையிலான தகராறு எல்லை மீறி சென்றதையடுத்து 21 வயதுடைய பெண்ணின் கை மன்னாவால்  கொண்டு தாக்கப்பட்டது.

அந்த தாக்குதலில் யுவதியின் இடது கையின் கீழ் பகுதி துண்டிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையின் பாகம் ஐஸ் பையில் வைக்கப்பட்ட நிலையில் சிறுமி உடனடியாக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஆனந்த ஜயவர்தன உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவினர் உடலிலிருந்து பிரிந்த கையை மாற்று அறுவை சிகிச்சையை ஆரம்பித்தனர்.

உதவி வைத்தியர்கள், மயக்க மருந்து நிபுணர், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதார உதவிக் குழுக்கள் மற்றும் இரத்த வங்கியின் உதவியினால் யுவதியின் கை வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டதாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்தார்.

சத்திரசிகிச்சையின் பின்னர் யுவதி கேகாலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யுவதியின் நிலைமை படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Exit mobile version