Site icon Tamil News

திருவொற்றியூர் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலய கும்பாபிஷேகம் தொடங்கியது

திருவொற்றியூர்

அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலய கும்பாபிஷேகம்

திருவொற்றியூர், மார்ச். 27-

திருவெற்றியூர்  எண்ணூர் விரைவு சாலையில் கே.வி.கே. குப்பம் மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ  படவேட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது.  அப்பகுதியில்  மீனவ மக்களின் காவல் தெய்வமாக உள்ள ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயம் சிறிய அளவில் இருந்தது. இந்த கோவிலை விரிவாக்கம் செய்து புணரமைக்கும் திருப்பணி கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியது.

கே.பி.சங்கர் எம். எல். ஏ தலைமையில் நடைபெற்ற திருப்பணியில் ஸ்ரீ படவேட்டம்மன், முருகன் விநாயகர் சன்னிதிகள் மிகவும் பிரமாண்டமாக நவீன முறையில் கட்டி முடிக்கபட்டன. திருப்பணி முடிவடைந்ததை ஒட்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா  19ஆம் தேதி  பந்தக்கால்  நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது . ஐந்து யாகசாலைகள் அமைக்கப்பட்டு தினமும் கோ பூஜை, கலச பூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக, மங்கள வாத்தியங்கள் முழங்க கலசங்கள் புறப்பாடாகின. அதைத் தொடர்ந்து சிவாச்சாரியார் சதீஷ் தலைமையில் குருக்கள் படவேட்டம்மன், விநாயகர் முருகன், ராஜகோபுரம், பஞ்ச கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்து  அங்கே கூடியிருந்த  பக்தர்களுக்கு புனித நீர் தெளித்தனர்.

அதைத் தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம் சக்தி பராசக்தி என விண்ணதிர முழங்கினர் அதனைத் தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜையும் தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சீர் வரிசையுடன் ஊர்வலமாக வந்து படவேட்டமனுக்கு மரியாதை செய்தனர். மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் கிராமத் தலைவரும் ஆலய தர்மகர்த்தாவுமான

கே.பி.சங்கர் எம். எல். ஏ மற்றும் கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர். கே.பி.சங்கர் எம்எல்ஏ குடும்பத்தார்

மற்றும் சென்னை, திருவள்ளூர் பகுதியில் இருந்து  மீனவ கிராம தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்

 

Exit mobile version