Site icon Tamil News

திருச்சி முன்னாள் மேயர் மகன் வெண்கல பதக்கம் வென்று சாதனை

கத்தார் நாட்டில் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், இந்தியா உள்பட 40 நாடுகள் பங்கேற்றன.

இந்தியா சார்பில் 3 ஆண் வீரர்களும் 3 பெண் வீரர்களும் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் தனி நபர் துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி முன்னாள் மேயர் சாருபலா தொண்டைமான் மகன் பிரித்வி ராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கத்தை வென்றார்.

இதையடுத்து கத்தாரில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த பிரித்வி ராஜ் தொண்டைமானை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரித்வி ராஜ் தொண்டைமான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த 15 ஆண்டுகளாக துப்பாக்கி சூடும் பயிற்சி செய்து வருகிறேன். சர்வதேச அளவில் முதல் முறையாக வெண்கல பதக்கம் பெற்றது உள்ளேன். வருங்காலத்தில் நிறைய பதக்கங்களை பெற வேண்டும் என்பது ஆசை. அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற வேண்டும் என்பது லட்சியம்.

கடந்த காலங்களை விட தற்போது மத்திய அரசு துப்பாக்கி சூடும் விளையாட்டிற்கு பல உதவிகளை செய்து வருகிறது. மாநில அரசு உதவிகளை அதிகமாக செய்தால் நன்றாக இருக்கும். தமிழக விளையாட்டு துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைப்பேன்.

துப்பாக்கி சூடும் பயிற்சிக்கு உதவி அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விளையாட்டு துறையில் இருந்தால் இளைஞர்களுக்கு கெட்ட பழக்க வாய்ப்புகள் இருக்காது. விளையாட்டில் ஆர்வம் காட்டினால் கெட்ட பழக்கத்திற்கு வாய்ப்பு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version