Site icon Tamil News

ஞானாங்க குணவர்தன காலமானார்

மூத்த நடிகர் ஞானாங்க குணவர்தன கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 78.

பராக்கிரம டி சில்வாவின் ‘ஹெவெனாலி அட மந்து’ திரைப்படத்தில் அறிமுகமான இவர், பல திரைப்படங்களிலும், தொலைகாட்சிகளிலும் நடித்துள்ளார்.

அவரது சடலம் நாளை (5) காலை 8.30 மணி முதல் பொரளையில் உள்ள தனியார் பிரேத அறையில் அடக்கம் செய்யப்பட்டு, சனிக்கிழமை (06) பிற்பகல் 3.00 மணிக்கு பொரளை மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.

Exit mobile version