Site icon Tamil News

ஜேசிபி இயந்திரம் கொண்டு தேடி வருகின்றனர்

காஞ்சிபுரம் மாநகராட்சி குருவிமலை வலத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் தினந்தோறும் 25க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் வேலை பார்த்து வரும் வேளையில் இன்று காலை 11 மணிக்கு மேலாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு தேடி வரும் வேளையில் பட்டாசு வெடி விபத்தால் சிதறிய உடல்களை கண்டறியும் வேலையிலும் ஈடுபட்டு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன,

முழுவதுமாக உயிரிழப்புகளும் மிக பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகவும் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இ தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் இரண்டு தீயணைப்பு வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா ஆர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் மேயர் மகாலட்சுமி யுவராஜ் விபத்து ஏற்பட்ட பகுதியில் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version