Site icon Tamil News

ஜெர்மனியில் சிறுமிக்கு நேர்ந்த கதி – குழப்பத்தில் பொலிஸார்

ஜெர்மனியில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிறுவன் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதுடன் பொலிஸார் குழப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தெற்கு ஜெர்மனியின் நகரமான பண்சய்ட் என்ற நகரத்தில் உள்ள சிறுவர்கள் இளைஞர் பராமரிப்பு அலுவலகத்தினால் நடாத்தப்படுகின்ற  பராமரிப்பு நிலையத்தில் 10 வயது சிறுமி ஒருவரின் இறந்த உடல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இவேளையில் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட 11 வயது சிறுவன் ஒருவரை தற்பொழுது பொலிஸார் இனங்கண்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

இந்நிலையில் ஜெர்மன் சட்டப்படி குற்றச்செயலுக்கு பொறுப்பேற்கும் வயது வராததால், அந்தச் சிறுவன் பாதுகாப்பான காப்பகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பராமரிப்பு நிலையத்தில் 90 இளைஞர் யுவதிகள் தங்கி வருவதாக தெரியவந்திருக்கின்றது. மேலும் குறித்த இளைஞர் யுவதிகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த 11 வயது சிறுவன் எதனால் 10 வயது சிறுமியை கொலை செய்தான் என என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பிரதேசத்திற்கு பொருப்பான பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.

Exit mobile version