Site icon Tamil News

ஜெர்மனியில் ஆயிர கணக்கானோருக்கு அதிர்ச்சி கொடுத்த புகழ் பெற்ற நிறுவனம்

ஜெர்மனியில் ஆயிர கணக்கானோருக்கு புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஜெர்மனி நாட்டில் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை மூடவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் பலர் தங்களுடைய பணிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனியில் பிரபல வர்த்தக ஸ்தபனமான கெலரியா கப் கொப் என்று சொல்லப்படுகின்ற இந்த நிறுவனமானது தனது கிளை நிறுவனங்களில் அதாவது மொத்தமாக இருக்கின்ற 129 கிளைகளைில் 52 கிளைகளை மூடவுள்ளதாக தற்பொழுது முடிவு எடுத்திருக்கின்றது.

இவ்வாறு இந்த 52 கிளைகள் மூடப்பட்டால் அதில் பணியாற்றும் 4500க்கும் மேற்பட்டவர்கள்  வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.

ஏற்கவே இந்த கெலரியா கப் கொப் என்பது ஒஸ்றியா நாட்டினுடைய பிரபல வர்த்தகர் பென்கு அவர்களால் வாங்கப்பட்டு தற்பொழுது நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளையில் இந்த கெலரியா கப் கொப் னுடைய ஒன்லைன் ரீதியிலான வியாபாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்திருக்கினறுது.

அதாவது கொரோனா காலங்களில் இந்த வியாபாரம் பாரிய அளவில் உயர்வடைந்துள்ளது. அதாவது கொரோனா காலங்களில் லொக் டௌன் போன்ற கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தினால் இலகுவில் இந்த வியாபாரம் பாரிய உயர்ச்சியை அடைந்துள்ளது.

இதேவேளையில் தற்பொழுது கொரோனா நீங்கிய பின் இந்த வியாபாரத்தில் பாரிய வீழ்ச்சி சந்தித்துள்ளதால் இவ்வகையான  சில நடைமுறைகளை இந்த நிறுவனமானது மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

 

Exit mobile version