Site icon Tamil News

புனித வெள்ளி ஊர்வலத்தை தவிர்த்துள்ள போப் பிரான்சிஸ்

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சில் கடந்த வார இறுதியில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய போதிலும்  வெள்ளிக்கிழமை வெளிவரும் சிலுவை வழி ஊர்வலத்தைத் தவிர்த்துள்ளதாக வத்திக்கான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக  86 வயதான போப்பாண்டவர் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் உள்ள உட்புற புனித வெள்ளி சேவையில் கலந்துகொள்வார் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி ராய்ட்டர்ஸின் கேள்விக்கு பதிலளித்தார்.

2013ல் போப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ரோமின் கொலோசியத்தில் நடக்கும் வயா க்ரூசிஸ் ஆராதனைக்கு போப் தலைமை தாங்காதது இதுவே முதல் முறை. அதை அவர் தனது இல்லத்தில் இருந்து பின்பற்றுவார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

Exit mobile version