Site icon Tamil News

பிரான்ஸில் வழங்கப்படும் உதவித் தொகை – விதிக்கப்பட்ட காலக்கெடு

பிரான்ஸின் எரிபொருள் உதவிக்காக விண்ணப்பிக்க 31ஆம் திகதி வரையே காலக்கெடு வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த கொடுப்பனவிற்கு தகுதியான பத்து மில்லியன் மக்களில் 6.5 மில்லியன் பேர் மட்டுமே இதுவரை உரிமை கோரியுள்ளனர்.

கடந்த மாதம் 28ஆம் திகதி வரை விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை இம்மாதம் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழிலுக்கு தங்கள் வாகனத்தை பயன்படுத்துவதும் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் இலக்காக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பணம் செலுத்தும் பணிகள் ஏற்கனவே தனிநபர்களைச் சென்றடையத் தொடங்கினாலும், தகுதியுடையவர்களில் 6.5 மில்லியன் மக்களே பதிவுசெய்துள்ளனர்.

இந்த நிலைமையில் விண்ணப்பங்கள் மார்ச் இறுதி வரை ஏற்கப்படும் எனவும் அதற்கு விண்ணப்பிக்கும் இணையத்தளம் 31ஆம் திகதி வரை மாத்திரமே திறந்து வைக்கப்பட்டிருக்கும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தாமதம் ஏற்படுத்தாமல் தகுதியுடையவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளுமாறு  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் கொடுப்பனவு என்பது ஆண்டிற்கான ஒரு முறை செலுத்தப்படும் கட்டணமாகும், இது சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தவிர அனைத்து வகையான சாலை வாகனங்களுக்கும் பொருந்தும். வங்கி பரிமாற்றம் மூலம் பணம் செலுத்தப்படுகிறது.

இந்தத் திட்டம் ஒரு வீட்டுக்கு ஒரு விண்ணப்பதாரருக்கு மட்டும் அல்ல. ஒரு தம்பதிரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், இருவரும் பணம் பெறலாம்.

Exit mobile version