Site icon Tamil News

ஜி பே மூலம் லஞ்சம் வாங்கிய மணிமங்கலம் போலீசார் 2 பேர் கைது

தாம்பரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளான காவலர்களை வன்மையாக கண்டித்ததோடு, அவர்களின் சர்விஸ் காலத்தில், இதைப் போன்ற அத்துமீறர்களில் ஈடுபட்டார்களா? என்று முழுமையாக விசாரிக்க போலீஸ் உதவி ஆணையருக்கு உத்தரவு.

சென்னை தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லையில் உள்ள கூடுவாஞ்சேரியில் வசிப்பவர் கிருஷ்ணன் 30. இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இவருடைய உறவுக்காரப் பெண் ஒருவருக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயம் முடிந்துள்ளது.

இந்தநிலையில் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட உறவுக்கார பெண்ணுடன், கிருஷ்ணன் நேற்று இரவு படப்பை அருகே காரில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த மணிமங்கலம் போலீஸ் இருவர், கிருஷ்ணனையும் இளம்பெண்ணையும் விசாரித்தனர்.

அவர்கள் அவர்கள் தாங்கள் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட உறவினர்கள் என்று கூறினார்கள்.

ஆனால் போலீசார் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை மிரட்டினர்.

அதோடு இருவரும் காருடன் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு வர வேண்டும்.

அங்கு உங்கள் மீது பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக வழக்கு பதிவு செய்வோம்.

பத்திரிக்கை  செய்தியும் போட்டோ உடன் கொடுப்போம் என்று மிரட்டினார்கள்.

அதன் பின்பு  நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூபாய் 5,000 பணம் வேண்டும் என்று லஞ்சம் கேட்டார்கள்.

கிருஷ்ணன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். அப்படி எனில் ஜி பே மூலம் 5,000 அனுப்பும்படி கூறினார்.

ஆனால் கிருஷ்ணன் தன்னிடம் ரூபாய் 4,000 தான் இருக்கிறது என்று ஜி பே மூலம், முதல் நிலை காவலர் மணி பாரதி (30) என்பவருக்கு செல்போன் மூலம் பணம் அனுப்பினார்.

அதோடு காவலர் சீரடையில் இருந்த இருவருடைய பெயர்களையும் ரகசியமாக குறித்து கொண்டார்.

இன்று காலை மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு கிருஷ்ணன் சென்றார்.

அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளரிடம், தங்களுக்கு நேற்று இரவு நடந்த சம்பவத்தை, காவலர்கள் உடையில் இருவர், ஜிபி மூலம் தங்களிடம் ரூபாய் 4000 பணம் பறித்ததையும் புகார் செய்தார்.

காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில், மணிமங்கலம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மணி பாரதி (30), காவலர் அமிர்தராஜ் (34) ஆகிய இருவர் தான் இந்த வழிப்பறி லஞ்சத்தில் ஈடுபட்டது என்று தெரிய வந்தது.

இதை அடுத்து மணிமங்கலம் போலீசார், கிருஷ்ணன் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, காவலர்கள் இருவரையும் கைது செய்து, தாம்பரம் குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்திரேட் சஹானா முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது மாஜிஸ்திரேட் சஹானா, காவலர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதோடு காவலர்கள் இருவரையும் கடுமையாக கண்டித்ததோடு, அவர்களின் சர்வீஸ் காலத்தில், எந்தெந்த காவல் நிலையங்களில் பணியாற்றினார்கள்? அப்போது இதைப் போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டார்களா? என்பது பற்றியும் முழுமையாக விசாரணை நடத்த, போலீஸ் உதவி ஆணையருக்கு மாஜிஸ்திரேட் சஹானா அறிவுறித்தனார்.

இதில் ஒரு காவலர் 10 ஆண்டும், மற்றொரு காவலர் 14 ஆண்டு பணியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Exit mobile version