Site icon Tamil News

சென்னை விமான நிலைய புதிய முனையம் பிரதமர் மோடியால் திறந்துவைப்பு!

சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 27ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாயில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது.

இந்த புதிய முனையத்தின், கீழ் தளத்தில், பயணிகளின் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரைதளத்தில் சர்வதேச வருகை பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.

2ஆவது தளத்தில், பயணிகளுக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 5 தளங்கள் இந்த புதிய முனையத்தில் அமைகின்றன.

இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும் பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து, 3.5 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Exit mobile version