Site icon Tamil News

சிங்கப்பூரில் குறைந்த வருமான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

சிங்கப்பூரில் குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளத்தைப் படிப்படியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் Progressive Wage Mark முத்திரை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.

படிப்படியாக உயரும் சம்பள முறை, திறன் மேம்பாட்டின் மூலம் வாழ்க்கைத் தொழில் முன்னேற்றத்துக்கு வழியமைத்தல் உள்ளிட்ட வழிமுறைகளை அந்த நிறுவனங்கள் பின்பற்றின.

குறைந்த வருமான ஊழியர்களுக்கு அரசாங்கம், நிறுவனங்கள், பயனீட்டாளர்கள் ஆகிய தரப்புகளின் ஒருங்கிணைந்த ஆதரவு தேவை என்று மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது (Zaqy Mohamad) கூறினார்.

அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்க விரும்புவதாகச் சொன்ன திரு. ஸாக்கி, வருமான ஏற்றத்தாழ்வைப் போக்க, குறைந்த வருமான ஊழியர்களுக்குச் சமூகமும் உதவ வேண்டும் என்றார்.

Exit mobile version