Site icon Tamil News

கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட கோவளம் ஊராட்சியில் நீண்ட நாட்களாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது, அதனைப் போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சியில் உள்ள ஏரியிலிருந்து மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கோவளம் ஊராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது அதனைத் தொடர்ந்து தையூர் ஏரியில் கிணறு தோண்டும் பணி சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கிணறு தோண்டும் பணியை தடுத்து நிறுத்தி கோவளம் ஊராட்சியில் கடந்த 25 வருடங்களாக கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் எடுத்து செல்லப்படுவதாகவும் திட்டத்தினை அதனால் இந்த திட்டத்தினை செயல்படுத்த கூடாது என தையூர் மக்கள் மறுப்பு தெரிவித்ததை கண்டித்து இன்று கோவளம் ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் யாஸ்மின் பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், கோவளம் ஊராட்சி நிர்வாகமும் ஒன்றிணைந்து உடனடியாக கோவளம் ஊராட்சிக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version