Site icon Tamil News

கால்கோல் விழா ( பந்தகால்) நடைப்பெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் உலக பிரசித்திப்பெற்ற சிவஸ்தலமாகும்.

இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ  பெருவிழாவையொட்டி பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதுபோல் இந்தாண்டு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவையொட்டி பந்த கால் நடும் நிகழ்ச்சி (கால்கோல் விழா) இன்று காலை  நடைப்பெற்றது.

பொதுமக்கள் முன்னிலையில் தாழக் கோவில் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் சுவாமி சன்னிதான வளாகம், சர்வ வாத்திய மண்டபம் அருகே ஒரு பந்தகால், சுவாமி சன்னிதானம் ( சோமாஸ்கந்தர் சன்னிதானம் ) எதிரே ஒரு பந்த கால், திரிபுரசுந்தரி அம்பாள் சன்னிதானம் கொடிமரம் அருகே ஒரு பந்த கால் என பந்த கால் வைபவம் நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பஞ்சரதத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

இவ்விழாவில் கோயில் செயல் அலுவலர் சக்திவேல்,கோவில் மேலாளர் விஜயன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version