Site icon Tamil News

கராத்தே பட்டய தேர்வில் அசத்திய மாணவிகள்

தற்காப்பு கலைகளில் அனைத்து தரப்பினரும் ஆர்வமாக கராத்தே பயின்று வருகின்றனர். முன்னர் மாணவர்கள் மட்டுமே கற்று வந்த  கலையாக கராத்தே தற்போது இளம் மாணவிகளும்  ஆர்வமுடன் பயிற்சி பெற துவங்கியுள்ளனர்.

குறிப்பாக மாணவர்களை விட அதிகம் கராத்தே பயிற்சயை மாணவிகள் எடுத்து வருகின்றனர்.அதன் படி கோவை  மை கராத்தே இண்டர்நேஷனல் மையம் சார்பாக கராத்தே பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பட்டைய தேர்வு மற்றும் கராத்தே பயிற்சி முகாம் கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பயிற்சி மையத்தின் ,தொழில் நுட்ப இயக்குனர் தியாகு நாகராஜ்   தலைமையில் நடைபெற்ற இதில்,சுமார்  300 பேருக்கு பயிற்சி நிறைவு பட்டையம் வழங்கப்பட்டது.

இதில் சுமார் 5 வயதிலான குழந்தைகள் முதல்,கராத்தே பயிற்சி முடித்தவர்களுக்கு முறையே மஞ்சள்,ஆரஞ்சு,பச்சை,நீலம்,பர்ப்பிள்,பிரவுன் மற்றும் பிளாக் என ஏழு பிரிவுகளாக பட்டையங்கள் வழங்கப்பட்டன. பட்டையம் பெற்றதில் மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் பட்டையம் பெற்றனர்.

இது குறித்து மாணவிகள் கூறுகையில், பள்ளி சென்று கொண்டே,  கராத்தே பயிற்சி பெறுவதால் தன்னம்பிக்கை அதிகரிப்பதாகவும், மேலும் கராத்தே பயில்வதால் உடல் மற்றும்  மன உறுதி வலிமை பெறுவதால், கல்வி விளையாட்டு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த முடிவதாக தெரிவித்தனர்.

Exit mobile version