Site icon Tamil News

கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள 700 இந்திய மாணவர்கள்!

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 700 இந்திய மாணவர்களுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு சென்ற மாணவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலமாக சென்றுள்ளன என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

மாநகரப் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இந்த அலுவலகம் அமைந்துள்ளது. ஆனால், இது ஆறு மாதங்களாக பூட்டியே இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சேவைகளுக்காக ஒரு மாணவரிடம் ரூ.16 லட்சத்திற்கும் அதிகமாக வாங்கியதாகவும் தகவல்கள் வருகின்றது.

மாணவர்கள் படிப்பு விசாவில் 2018-19 இல் கனடாவுக்குச் சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் சமீபத்தில் வட அமெரிக்க நாட்டில் நிரந்தர வதிவிடத்திற்கு (PR) விண்ணப்பித்த பிறகு தான் இந்த மோசடி தெரிய வந்தது.

அவர்களது ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ​​கனேடிய அதிகாரிகள் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட சேர்க்கை சலுகை கடிதம் போலியானவை என்று கண்டறிந்தார்கள்.கனேடிய எல்லைப் பாதுகாப்பு நிலையம் அவர்களுக்கு நாடு கடத்தல் கடிதங்களை அனுப்பியுள்ளது.

Exit mobile version