Site icon Tamil News

கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுவாயுதங்களுடன் பயிற்சி செய்யும் ரஷ்யா!

பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்புக்கான பயிற்சியை ரஷ்யா தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த பயிற்சியில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புகள் மற்றும் 300 உபகரணங்கள் ஈடுபடுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா தனது அணுவாயுத சேமிப்பை பெலாரஸில் நிறுத்துவதாக அறிவித்துள்ள சில நாட்களில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இராணுவ வலைப்பதிவாளர்களின் கூற்றுப்படி, யார்ஸ் அமைப்புகள் 7500 மைல்கள் வரம்பைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version