Site icon Tamil News

ஒற்றை தலைமையின் கீழ் இயங்க உள்ள அதிமுக

அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுகவினர் பட்டாசு Symptoms இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்த நிலையில் அதிமுக பொதுசெயலாளராக அண்மையில்  எடப்பாடி பழனி சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

அதில் அதிமுக பொது குழுக்கூட்டத்தில்  எடப்பாட்டி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அதனை வரவேற்கும் விதமாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

செம்பாக்கம் பேருந்துநிலையம் அஸ்தினாபுரம் பேருந்திலையில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் தலைமையில்

பட்டாசுகள் வெடித்தும்  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் இது வரலாற்றுமிக்க தீர்ப்பு என்றும் ஒற்றை தலைமையின் கீழ் இயங்க உள்ள அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறினார்

Exit mobile version