Site icon Tamil News

உயர்ரக போதை பொருட்கள் விற்பனை ஒருவர் கைது

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் தொடர்ந்து துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளகிணர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடமான வெள்ளகிணர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை பொருளை METHAMPHETAMINE-ஐ வைத்து இருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஷனித் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.24,000/- மதிப்புள்ள 12 கிராம் எடையுள்ள உயர்ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் (METHAMPHETAMINE)*-ஐ பறிமுதல் செய்து, அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைந்தார்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை கோவை மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 192 நபர்கள் மீது 144 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடம் இருந்து சுமார் 426.776 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டும், மேலும் உயர்ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 4 நபர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடம் இருந்து சுமார் 11 கிராம்* எடையுள்ள METHAMPHETAMINE உயர் ரக போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப் போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Exit mobile version