Site icon Tamil News

இலங்கையில் சோம்பேறிகளாக மாறிய மக்கள் – காரணத்தை வெளியிட்ட நிபுணர்

இலங்கையில் வசிக்கும் ஒவ்வொரு 3 பேரில் ஒருவர் சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றா சுகாதார பணியக சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஷெரின் பாலசிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.

இதனால், இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version