Site icon Tamil News

ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

பிரான்சில் ஆல்ப்ஸ் மலையில் மான்ட் பிளாங்கின் தென்மேற்கே ஏற்பட்ட பனிச்சரிவில் 4 பேர் இறந்துள்ளனர்.

மேலும்  9 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.

அர்மான்செட் பனிப்பாறையில் பகலில் பனிச்சரிவு ஏற்பட்டது என்றும்  அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் சிக்கியவர்கள் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தனர் என்று Haute-Savoie இன் உள்ளூர் அதிகாரிகளின் செய்தித் தொடர்பாளர் இம்மானுவேல் கோக்வாண்ட் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது இந்த அனர்த்தத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பனிச்சரிவு 3,500 மீட்டர் உயரத்தில் ஒரு கி.மீ முதல் 500 மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது என்றும் அதன் காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version