Site icon Tamil News

போருக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்ட குடும்பம் ஒன்று ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அர்ஷக் மகிச்சியன் என்ற குடும்பத்திற்கே 50 ஆண்டுகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் -ரஷ்யா போரில் இருந்து தப்பி பிழைத்த அர்ஷக் மகிச்சியன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றனர். இவர்கள் போருக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில். அவர்களுடைய குடும்பத்தினர் ரஷயாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகிச்சியனின் தந்தை மற்றும் அவரது சகோதரரின் ரஷ்ய குடியுரிமை பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு டொனட்ஸ்கின் கிழக்குப் பகுதியில் உள்ள  கோஸ்டியன்டினிவ்காவில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவசர சேவைகள் தெரிவித்தன.

அதேபோல் சுமியின் வடக்குப் பகுதியில் பிலோபிலியா மீது நடத்தப்பட்ட கடுமையான ஷெல் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், மொத்தமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version