Site icon Tamil News

அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த மேற்படிப்பு படித்த நம் நாடு மாணவர்கள்

அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து மேல் படிப்பு படித்த நம் நாட்டு மாணவர்கள் வெளிநாடு வேலைக்கு சென்ற காலம் மாறி தற்போது வெளிநாட்டு மாணவர்கள் தமிழகத்தில் பணியமர  ஈர்க்கும் வண்ணம் தொழில் நடவடிக்கைகள்,வெளிநாட்டு முதலீடு ஆகியவை மேம்பட்டுள்ளது என அறிவியல் , தொழில்நுட்ப தொடர்புக்கான தமிழக கவுன்சில் செயலாளர் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்..

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில் , அறிவியல்  தொழில்நுட்ப தொடர்புக்கான தமிழக கவுன்சில் மற்றும் அம்பத்தூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி இனைந்து தேசிய அறிவியல் மற்றும் கணிதவியல் தினம் கொண்டாடப்பட்டது முன்னதாக நிகழ்ச்சியின் துவக்கமாக 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் அறிவியல் மற்றும் கணிதவியல் குறித்தவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைகளில் பதாகை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்..

தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் கண்காட்சி, அறிவியல் சார்ந்த கருத்தரங்கம் ,அறிவியல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை அறிவியல் தொழில்நுட்ப தொடர்புக்கான தமிழக கவுன்சில்  உறுப்பினர் செயலாளர் மருத்துவர் சீனிவாசன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் .

இதில் இயந்திரங்களை கட்டுப்படுத்தும் மோசன் சென்சார் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கருவிகள் தடயவியல் நிபுணத்துவம் சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி ரத்தங்களை வைத்து டிஎன்ஏ மாதிரி ஒப்பீடு செய்வது குற்றவாளிகளை உறுதி செய்வது போன்றவை,

சாதாரண லேப்டாப்பை பயன்படுத்தி தீ விபத்தை முன்கூட்டியே கண்டறிதல் போன்ற  பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப படைப்புகளை மாணவர்கள் காட்சி படுத்தினர் இதனை அவர் பார்வையிட்டார்..

இயற்கை வண்ணங்களை சேகரித்து அதனை பயன்படுத்தும் வழிமுறைகள், செல்போன் பயன்பாட்டு குறித்து பயன்பாடுகள் மற்றும் தீமைகள் குறித்து விளக்க நிகழ்ச்சி, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி அறிவியல் தொழில்நுட்ப பட்டறை, காளான் வளர்ப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில்  தலைசிறந்த விஞ்ஞானி அப்துல் ரஹ்மான்,

கல்லூரி தலைவர் சேது குமணன் ,கல்லூரி முதல்வர் மீரா முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..

நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அறிவியல் , தொழில்நுட்ப தொடர்புக்கான தமிழக கவுன்சில் செயலாளர் சீனிவாசன் கூறுகையில் தமிழக மாணவர்களில் சில மாணவர்கள் மட்டும் பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

வெளிநாடுகளுக்கு செல்வதை விட இங்கேயே சம்பாதிப்பது என்பது சுலபம் ஏனெனில் நம் அரசின் தொழிற் கொள்கை போகின்ற போக்கு அத்தகைய நிலையை உருவாக்கும், வெளிநாட்டு மாணவர்களை தமிழ்நாடு ஈர்க்கும் வண்ணம் தொழில் நடவடிக்கைகள்,வெளிநாட்டு முதலீடு ஆகியவை மேம்பட்டுள்ளது, தொழிற் வளர்ச்சிக்காக  தமிழக அரசு ஒன்றிய அரசுடன் சேர்ந்து  பல திட்டங்களை வகுத்து வருகிறது…..

 

Exit mobile version