Site icon Tamil News

அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே புதிய உடன்பாடு

அமெரிக்காவும் தென் கொரியாவும் புதிய உடன்பாடு அறிவிக்கப்பட்டுள்ளன.

விரிவுபடுத்தப்பட்ட அணுச்சக்தி தொடர்பான உடன்பாடே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவிடமிருந்து அச்சுறுத்தல் தொடரும் வேளையில் இரு நாடுகளும் புதிய உடன்பாட்டைச் செய்துள்ளன.

தென் கொரிய ஜனாதிபதி Yoon Suk Yeol முதன்முறை அதிகாரத்துவப் பயணமாக வாஷிங்டன் சென்றுள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்தபோது விரிவான புதிய உடன்பாடு பற்றி அறிவிக்கப்பட்டது.

நாற்பது ஆண்டுகளில் முதன்முறை அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களைத் தென் கொரியாவில் நிறுத்த அமெரிக்கா திட்டமிடுவதாக பைடன் கூறினார்.

வட கொரியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் புவியீர்ப்பு ஏவுகணைகளை அடிக்கடி சோதித்து வரும் சூழலில் அமெரிக்கா அவ்வாறு கூறியது.

தென் கொரியா தன்னிச்சையாக அணுவாயுதத் திட்டத்தைத் தொடராது என்று யூன் மீண்டும் உறுதியளித்தார்.

உடன்பாட்டின் ஓர் அங்கமாக, புவியீர்ப்பு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா தென் கொரியாவுக்கு அனுப்பும்.

1980களுக்குப் பிறகு முதன்முறை அத்தகைய நீர்முழ்கிக் கப்பல் அனுப்பப்படவிருக்கிறது.

Exit mobile version