Site icon Tamil News

ஊழல் செய்து அமெரிக்காவில் 30 நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா!

பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட நகரங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா என்ற தனிநாட்டின் பெயரில் அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நித்யானந்தாவின் சிஷ்யைகள் பங்கேற்றுப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கைலாசாவுடன், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரம், கலாசார ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிஸ்டர் சிட்டி என்ற ஒப்பந்தம் செய்துகொண்டது.இதன்போது ரிச்மண்ட், டெய்ட்டன் உட்பட 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் கைலாசாவுடன் கலாச்சார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது.

நித்யானந்தா பற்றிய விவரங்கள் அங்குள்ள நிர்வாகத்திற்கு தெரியவந்ததால், நெவார்க் நகர நிர்வாகம் கைலாசாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.மேலும் மற்ற நகரங்கள் இதுபற்றி ஆலோசனை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 

Exit mobile version