Site icon Tamil News

அமெரிக்காவில் திடீரென வானில் தூக்கி வீசப்பட்ட கார்..உயிருடன் வெளியே வந்த ஓட்டுநர்!(வீடியோ)

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஃப்ரீவேயில் கார் ஒன்று தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த பிக்அப் டிரக்கில் இருந்து கழன்ற டயர் ஒன்று, கருப்பு நிற கியா கார் ஒன்றின் மீது மோதியதில் கார் வானில் தூக்கி வீசப்பட்டது.

டிரக்கின் முன் இடது டயர் தளர்ந்து கியாவின் கீழ் வலது புறம் உருண்டது, இதனால் கியா காற்றில் பத்து அடி வரை உயர்ந்து பின் மீண்டும் சாலையில் அமர்ந்தது.அதே நேரத்தில், டிரக்கில் இருந்து வெளியேறிய டயர் காரை மீண்டும் பின்புறமாக தாக்கியது.

 

Exit mobile version