Tamil News

முதன்முறையாக யுவன் இசையில் இணையும் தளபதியும், இசைஞானியும்…

நடிகர் விஜய் நடிக்கும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

சை ஃபை ஃபிக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, பார்வதி நாயர் என்று நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் இப்படத்தின் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் வரும் மே மாதம் வெளியிடுவதாகவும், படத்தில் இன்னொரு பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Exit mobile version