Site icon Tamil News

யூடியூபரின் கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் முகமது இர்ஃபான். அவர் தனது YouTube சேனலில் உணவு வலைப்பதிவுகள், மதிப்புரைகள் மற்றும் வாழ்க்கை முறை வீடியோக்களுக்காக நன்கு அறியப்பட்டவர்.

ஆரம்பத்தில், அவர் ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிந்தார், பின்னர் அவர் ராஜினாமா செய்தார்.மற்றும் ஆரோக்கியமான உணவுகள் முதல் இதயமான இனிப்புகள் வரை வ்லாக் செய்யத் தொடங்கினார்.

சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பிற மாவட்டங்களில் உணவு அருந்திய அனுபவங்களையும் அவரது youtube வாயிலாக பகிர்ந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று பிரபல youtuber முகமது இர்ஃபானின் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் இருந்து காரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது மறைமலைநகர் அருகே பொத்தேரி எஸ்ஆர்எம் கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் மூதாட்டி பத்மாவதி என்பவர் சாலையை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி வந்த இஃபானின் கார் மோதியதில் மூதாட்டி பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொத்தேரி போக்குவரத்து புலனாய்வுத்துறை காவல்துறையினர் இஃபானின் கார் ஓட்டுநர் அசாருதீன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைகளை கடக்கின்ற போது பல விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீண்ட ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் சாலைய கடக்க மேம்பாலம் ஒன்று அமைத்து தர கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதேபோல் முக்கியமான நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version