Site icon Tamil News

அமெரிக்காவில் இசையால் கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாரிய அளவிலான இளைஞர்கள் செவித் திறனை இழக்கும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

பலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு வருவதால் அவர்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் 2000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

35 சதவீதம் பேர் கேட்கும் திறன் குறைபாடு காரணமாக தங்கள் உரையாடல்களைத் தொடர முடியவில்லை என்று தெரிவித்தனர்.

பொது இடங்களில் ஓலி மாசு காரணமாக புதிய நோய் பேரிடர் போல் இந்த பாதிப்பு சத்தமில்லாமல் பரவிக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.

மிகவும் சத்தமாக இசையைக் கேட்டு ரசிக்கும் இளம் தலைமுறையினரும் அதிகளவில் இந்த பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

Exit mobile version