Tamil News

ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் யோகா அமர்வுகள்

சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில், புதன்கிழமை (21) ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் உள்ள இந்தியாவின் ஆராய்ச்சி நிலையங்களில் யோகா அமர்வுகளை நடாத்தவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரைம் மெரிடியன் என்பது 0 டிகிரி தீர்க்கரேகையின் கோடு ஆகும். இது பூமியைச் சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு திசைகளிலும் உள்ள தூரத்தை அளவிடுவதற்கான தொடக்க புள்ளியாகும்.

இந்திய ஆர்க்டிக்  நிலையம் மற்றும் அண்டார்டிக்  நிலையம் என்பவற்றுக்கு அருகே விழும் நாடுகளுடன் யோகா ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

அத்துடன் அமெரிக்கா, ரஷ்யா, போர்த்துகல் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட 34 நாடுகளிலும், அங்குள்ள இந்திய கடற்படை கப்பல்களிலும் யோகா அமர்வுகள் இடம்;பெறவுள்ளன. மேலும் உலகெங்கிலும் உள்ள ஒன்பது துறைமுகங்களில் இந்திய கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டு, பொது யோகா நெறிமுறை முன்னெடுக்கப்பட உள்ளது.

Exit mobile version