Site icon Tamil News

ஓய்வை அறிவித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்டை எதிர்கொள்ள இருந்தார்.

பின்னர், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதைதொடர்ந்து, மகளிர் தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சீத் ராணி ஆகியோர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை சந்தித்தனர்.

தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இவரது மேல்முறையீட்டை ஒலிம்பிக் கமிட்டி ரத்து செய்தது.

இதையடுத்து சர்வதேச மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்து இருக்கிறார். “அம்மா, மல்யுத்தம் எனக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கனவு எனது நம்பிக்கை அனைத்தும் உடைந்துவிட்டது. இனியும் என்னிடம் வலிமை இல்லை. குட்பை ரெஸ்ட்லிங் 2001-2024. உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். மன்னித்து விடுங்கள்,” என்று வினேஷ் போகத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version