Site icon Tamil News

உலகின் காரமான சிப்ஸ் – Amazon, eBay தளங்களிலிருந்து அகற்றம்

Amazon, eBay தளங்களிலிருந்து மிதமிஞ்சிய கார மிளகைக் கொண்ட ‘Paqui Chip’ எனும் சிப்ஸ் அகற்றப்பட்டுள்ளது..

அதை உட்கொண்டதால் அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது Harris Wolobah என்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது.

One Chip Challenge அதாவது, காரமான மிளகு சிப்ஸைச் சாப்பிடும் சவாலில் அந்த இளையர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கடைகளிலிருந்து ‘Paqui Chip’ மீட்கப்பட்டுள்ளது. உலக அளவில் இறக்குமதி செய்யப்பட்ட அந்த வகை சிப்ஸ் இன்னும் விற்பனையில் உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள தனது தளங்களிலிருந்து அது நீக்கப்படும் என்று Amazon சொன்னது.

வொலொபாவின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

ஆனால் One Chip சவாலைத் தடை செய்யும்படி அவரின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version