Site icon Tamil News

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை – விழிப்புடன் இலங்கை

இலங்கையானது குரங்கம்மை நோய் தொடர்பில் விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் குரங்கம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்துள்ளது.

குரம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளாவாக பதிவாக வில்லை. தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயலில் இருப்பதால் நோய் தாக்கம் தொடர்பில் அச்சுறுத்தல் குறைவாக உள்ளது.

எனினும், கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் கலந்தாசோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளமையினால் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பு நடடிவடிக்கைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version