Site icon Tamil News

உலக மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – அமெரிக்கா வெளியிட்ட தகவல்

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் இந்த விடயத்தை தெரிவித்தது.

கடந்த செப்டம்பா் 26ஆம் திகதியே, இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.

உலக மக்கள்தொகை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த 2000-ஆம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது.

மக்களின் சராசரி வயது 32-ஆக அதிகரித்துள்ளது. வரும் 2060-ஆம் ஆண்டு அது 39-ஆக உயரும். கனடா போன்ற நாடுகளில் முதியோா்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்தது.

இந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. பெண்கள் கருவுறும் விகிதம் தொடா்ச்சியாக குறைந்து வருவது கடந்த 50 ஆண்டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version