Site icon Tamil News

உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கையில் கண்காணிப்பு

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது கிடைக்கப்பெறும் எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆன் பிஜார்ட் தலைமையிலான குழுவினர் விசேட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

உலக வங்கியின் உதவியுடன் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிலையைக் கண்டறிவதும் அவர்களின் விஜயத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

மேலும், ஜனாதிபதி தலைமையில் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள பலதரப்பு நிதி நிறுவனங்களின் மாநாட்டிலும் அவர்கள் இணைந்துகொள்ள உள்ளனர்.

மேலும், இந்த நாட்டில் விவசாயத் துறையில் மேலும் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி கூறுகிறது.

உலக வங்கியின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் ராஜாங்கனை புளிப்பு வாழைத் தோட்டத் திட்டத்தை அவதானித்த போதே அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆன் பிஜார்ட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட பலர் கலந்துகொண்டதுடன், புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் மூலம் கணிசமான அந்நியச் செலாவணியை நாட்டுக்கு ஈட்ட முடிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Exit mobile version