Tamil News

தங்கள் கருமுட்டையை உறைய வைத்து பாதுகாக்கும் பெண்கள் – எந்த நாட்டில் தெரியுமா?

தைவானில் சட்டம் ஒரு நாள் மாறலாம் என்ற நம்பிக்கையில், ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கருமுட்டையை உறைய வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தைவானில் தற்போது பெரும்பாலான பெண்கள் தங்கள் கருமுட்டையை உறைய வைத்து பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்த முட்டைகளை எதிர்காலத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.தற்போதைய சட்டங்களின் அடிப்படையில், திருமணமாகாதவர்கள் தங்கள் கருமுட்டையை எந்தவகையிலும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தைவானை பொறுத்தமட்டில், பெண்கள் பெரும்பாலும் தனியாகவே வாழ விரும்புகின்றனர்.

Taiwan women freeze their eggs as 'insurance' in hopes of law change - SWI  swissinfo.ch

வம்சவிருத்திக்காகவேனும் திருமணம் செய்துகொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. இதில் பல பெண்களும், தங்கள் முடிவுக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பதாக கூறுகின்றனர்.மேலும் இதுவே தங்களது காப்பீடு எனவும் பெருமையாக கூறுகின்றனர். தாய்வானை பொறுத்தமட்டில் ஒரு பெண்ணுக்கு 0.89 குழந்தைகள் என்ற கருவுறுதல் விகிதமே உள்ளது. மேலும், தனித்து வாழும் பெண் ஒருவர், தமது கருமுட்டையை உறைய வைத்து பாதுகாக்கும் வாய்ப்பு தைவானில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவில் இந்த முறை தடை செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஆணும் பெண்ணும் முன்னெடுக்கும் திருமணத்தில் மட்டுமே உறைய வைத்த கருமுட்டைகளைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வம் என குறிப்பிட்டுள்ளனர்.இதில் திருமணமாகாத பெண்கள், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கட்டுப்பாடுகள் காரணமாக உறைய வைத்துள்ள கருமுட்டைகளில் 8% வரையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசியாவிலேயே முதல் நாடாக கடந்த 2019ல் தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய நாடு தைவான். மட்டுமின்றி மே மாதம் முதல் தன் பாலின தம்பதிகள் கூட்டாக ஒரு குழந்தையை தத்தெடுக்கும் உரிமையை வழங்கியது.இந்த நிலையில் தற்போது திருமணம் செய்துகொள்ளாத 35ல் இருந்து 39 வயதுடைய பெண்கள் தங்கள் கருமுட்டைகளை பாதுகாக்க முடிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 86 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் கடந்த ஓராண்டில் மட்டும் இதுபோன்ற சேவையை அளிக்க சுமார் டசினுக்கும் அதிகமான மையங்கள் உருவாகியுள்ளன.கருமுட்டையை உறைய வைக்க, ஒருவருக்கு மொத்தமாக 2,600 முதல் 3,900 டொலர் செலவாகும் எனவும், ஆண்டுக்கு பாதுகாக்கும் கட்டணம் என 160ல் இருந்து 320 டொலர் வரையில் வசூலிக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.

Exit mobile version