Site icon Tamil News

சிங்கப்பூரில் விலைவாசி உயர்வு – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாக பாரிய அளவில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதனை அரசாங்கம் கண்காணிக்கும் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் Zaqy Mohamad தெரிவித்துள்ளார்.

இதனால் படிப்படியான சம்பள உயர்வு முறையின் கீழ் ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது.

அதனால் நிறுவனங்களின் வர்த்தகச் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கழிவு நிர்வாக நிறுவனங்களின் ஊழியர்களைச் சந்தித்துப் பேசிய Zaqy அவ்வாறு கூறினார்.

அடுத்த மாதத்திலிருந்து கழிவு நிர்வாகத் துறையில் படிப்படியான சம்பள உயர்வு முறை நடப்புக்கு வரும். சுமார் 3,000 உள்ளூர் ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதுடன் துறையில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் இன்னும் தெளிவாக இருக்கும்.

அதிகரிக்கும் சம்பளத்தைச் சமாளிக்க முதலாளிகளுக்கும் உதவி கிடைக்கும். படிப்படியாக உயரும் சம்பள உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், சம்பள உயர்வில் அரசாங்கம் 75 விழுக்காடு வரை நிதி வழங்கும்.

Exit mobile version