Site icon Tamil News

கனடாவில் லாட்டரியில் 10 மில்லியன் டொலரை வென்ற பெண்

டொராண்டோவைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவர், ஒன்டாரியோவின் LOTTO 6/49 மூலம் 10.6 மில்லியன் டொலர் பரிசை வென்ற பிறகு மில்லியன் பணக்காரர் ஆனார்.

நார்த் யார்க்கைச் சேர்ந்த சியோமின் ஹான் கடந்த சில ஆண்டுகளாக லாட்டரி விளையாடியதாக OLG தெரிவித்துள்ளது. அவரது வெற்றி செப்டம்பர் 10, 2022, டிராவில் கிடைத்துள்ளது.

“எனக்கு முன்னால் உள்ள எண்ணை என்னால் நம்ப முடியவில்லை, அதனால் அது உண்மைதானா என்பதை சரிபார்க்க என் சகோதரியை அழைத்தேன்” என்று ஹான் கூறினார்.

66 வயதான அவர் ஒரு புதிய வீடு மற்றும் ஒரு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், ஐரோப்பாவிற்கு பயணம் செய்ய இருப்பதாகவும் கூறினார்.

“நான் அமைதியாக உணர்கிறேன், ஆனால் வெற்றியாளராக இருப்பதில் உற்சாகமாக இருக்கிறேன். இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு நான் ஆதாரம்.”

ஹானின் வெற்றிக்கான டிக்கெட் நோர்த் யார்க்கில் உள்ள யோங்கே தெருவில் உள்ள JJ ஸ்மோக் சென்டரில் வாங்கப்பட்டது.

Exit mobile version