Site icon Tamil News

பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி இயேசு உயிர்த்தெழுவாரா? : அடுத்தடுத்து கிடைக்கப்பெறும் ஆதாரங்கள்!

ஜெருசலேமில் ஒரு பழங்கால கல் முத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு போர்வீரருடன் ஒன்றித்து காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு புனித நகரத்தில் ஒரு உயர் பதவியில் இருந்த ஒருவரின் கழுத்தில் இந்த நினைவு சின்னம் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கல் முத்திரைகள் ஒரு வகையான பண்டைய ஐ.டி. அட்டை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முத்திரையில் இரண்டு பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யெஹோஸர்’ மற்றும் ‘ஹோஷயாஹு’ ஆகிய பெயர்களாகும். இவை இரண்டும் பைபிளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யோசேர் என்பதன் அந்த காலப்பகுதியில் இஸ்ரவேலின் அரசனாக இருந்த டேவிட் மன்னரின் போர்வீரர்களில் ஒருவரின் பெயர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோஷ்யாஹு என்ற பெயர், எரேமியாவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அசாரியா பென் ஹோஷாயா’ என்ற பெயரின் இணையான வடிவமாகும்.

ஹைஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி கூட்டாளர் ரோனி ரீச் ஒரு செய்திக்குறிப்பில், “ஒருவேளை யெஹோஸர் தான் அந்தப் பொருளின் மீது பெயர்களைப் பொறித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு, பைபிளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பண்டைய ஜெருசலேமில் செழித்து வரும் பல தேசிய கலாச்சாரத்தை ஆதரிக்க புதிய ஆதாரங்களை வழங்குகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version