Site icon Tamil News

ஒட்டகச்சிவிங்கிகளின் கழுத்து ஏன் நீளமாக இருக்கிறது : புதிய கோட்பாட்டை முன்வைத்த விஞ்ஞானிகள்!

ஒட்டகச்சிவிங்கிகள் ஏன் அவற்றின் பண்புரீதியாக நீண்ட கழுத்தை கொண்டிருக்கிறது என்பதற்கான புதிய கோட்பாட்டை  விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர்.

பொதுவாக ஒட்டகங்கள் ஒரு காலத்தில் யூனிகார்ன்களைப் போன்ற புராண உயிரினங்கள் என்று நம்பப்பட்டது.

ஆரம்பகால ஐரோப்பியர்களால் “கேமலோபார்ட்” என்று அழைக்கப்பட்ட இந்த விலங்குகள் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து ​​பூமியின் இயற்கையான ஒழுங்கிற்குள் நுழைந்தன.

இருப்பினும் இவ்வாளவு காலமாக ஆய்வு செய்யப்பட்ட போதில் அதன் கழுத்து நீளமாக இருப்பதற்கான காரணத்தை கோட்பாடு ரீதியாக விளக்க முடியாமல் இருந்தனர்.

இந்நிலையில் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் சர் சார்லஸ் டார்வின் முன்மொழிந்த ஒரு கோட்பாட்டை விஞ்ஞானிகள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கோட்பாட்டின் படி அசாதாரண கழுத்து வளர்ச்சிக்கு வழிவகுத்த பண்புகளுக்குப் பின்னால் பெண் ஒட்டகச்சிவிங்கிகள் இருப்பதாகக் கூறுகின்றனர். சர் சார்லஸ் தனது “உயிர் பிழைப்பு” கோட்பாட்டைப் பயன்படுத்தி இதனை விளக்கியுள்ளார்.

அதாவது பெண் ஒட்டகச்சிவிங்கிகள் தங்கள் ஆண் சகாக்களை விட நீண்ட கழுத்தைக் கொண்டிருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அவை கர்ப்பம் மற்றும் பாலூட்டுதல் ஆகியவற்றிலிருந்து ஊட்டச்சத்து தேவையை அதிகரித்துள்ளன.

இதன் மரபணுவே ஒட்டகசிவிங்களின் கழுத்து பகுதி நீளமாக இருப்பதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Exit mobile version