Site icon Tamil News

தொடர்ந்து சேவையாற்றுவேன் – பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ்

தம்மால் இயன்றவரை மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றப் போவதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

தமது உடல் நலனில் அக்கறை காட்டி ஆறுதல் கூறிய அனைத்து நல்லுங்களுக்கும் அவர் நன்றி கூறிக்கொண்டார்.

தமது தாயார் 2ஆம் எலிசபெத் அரசியார் காலமான பிறகு 2022இல், 75ஆவது வயதில் அவர் பிரித்தானிய மன்னராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

தற்போது சிகிச்சை பெறும் மன்னர் சார்ல்ஸ் பொது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளார்; தனிப்பட்ட சில சந்திப்புகளை மட்டும் அவர் தொடர்ந்து நடத்திவருகின்றது.

75ஆவது காமன்வெல்த் ஆண்டுநிறைவையொட்டிப் பதிவுசெய்யப்பட்ட உரையில் மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவதே தமது கடமை என்று மன்னர் சார்ல்ஸ் கூறியுள்ளார்.

மன்னர் சார்ல்ஸ் ஓய்வில் இருக்கும்போது அவரது பொறுப்புகளில் பெரும்பாலானவற்றை அவரது மனைவி 76 வயது அரசி கமிலாவும் அவரது மகன் 41 வயது இளவரசர் வில்லியமும் கவனித்துவருகின்றனர்.

Exit mobile version