Site icon Tamil News

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணைய ரஷ்யா கடும் முயற்சி

உக்ரைன்-ரஷ்யா போர் நெருக்கடிக்கு மத்தியில் ரஷ்யா மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணைய முயற்சிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செயலை மிகவும் வேடிக்கையான மற்றும் ஆச்சரியமான நடத்தை என தெரிவித்திருந்தன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் உத்தியோகபூர்வ படையெடுப்பிற்கு கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் இணையதளத்தில் 2024-2026 காலத்திற்கான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கான வேட்பாளராக ரஷ்யா தனது நாட்டின் பெயரையும் பட்டியலிட்டுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு அக்டோபர் 10ஆம் திகதி நடைபெற உள்ளது.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் பேரவையில் ரஷ்யாவை இணைத்துக் கொள்வது தொடர்பில் நேட்டோ அமைப்பை வழிநடத்தும் நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் மீது படையெடுக்க வேண்டாம் என ரஷ்யாவுக்கு எவ்வளவோ அறிவுரைகள் வழங்கப்பட்டும் எல்லையில்லா போரை துவக்கியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உக்ரைனில் நடந்த போரின் போது ரஷ்யா பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

உக்ரைன் குழந்தைகளை ரஷ்யாவிற்கு நாடு கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தற்போது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

Exit mobile version