Site icon Tamil News

WhatsApp அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சங்கள்!

WhatsApp நிறுவனம் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது முக்கிய ஐந்து அம்சங்களை கூடுதலாக WhatsApp அறிமுகப்படுத்தி இருக்கிறது.

உலகம் முழுவதும் அதிக பயனாளர்களைக் கொண்ட செயலியாக WhatsApp உள்ளது. இது மட்டுமல்லாது WhatsApp மிக முக்கிய தொலைத்தொடர்பு செயலியாக உருவெடுத்து இருக்கிறது.

WhatsApp நிறுவனத்தை கடந்த ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை நிறுவனமான மெட்டா கைப்பற்றியது. மெட்டா WhatsAppபை கையகப்படுத்திய பிறகு WhatsAppபில் பல்வேறு அதிரடி மாற்றங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது.

இந்த நிலையில் மெட்டா நிறுவனத்தின் சார்பில் WhatsApp செயலியில் புதிய அப்டேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் முன்பு இருந்த அம்சங்களும் தற்போது மாற்றி அமைக்கப்பட்டு பயனாளர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ள 5 முக்கிய அப்டேட்டுகள். WhatsAppஇல் இருக்கக்கூடிய மிகப் பிரதான பிரச்சனையாக பார்க்கப்பட்டது.

போட்டோக்களினுடைய தரக்குறைபாடு. வாட்ஸ் அப்பில் போட்டோக்கள் அனுப்பும்பொழுது அதனுடைய குவாலிட்டி மிக குறைவாக இருக்கிறது என்று சொல்லப்பட்ட நிலையில் போட்டோக்களின் குவாலிட்டியில் எந்தவித மாறுபாடும் இன்றி HD வடிவில் அனுப்புவதற்கான போட்டோ ஹெச்டி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதன் மூலம் வீடியோக்களும் ஹெச்டி வடிவில் அனுப்ப முடியும்.

மேலும் இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ மெசேஜை ஒரு நிமிடத்திற்குள் பதிவு செய்து அனுப்பும் வகையில் இந்த ஆப்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

பயனிலாளர்களினுடைய மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்தது அன்னோன் நம்பர்களிலிருந்து வரும் மெசேஜ்கள் மற்றும் கால்கள். அவற்றை தடுத்து பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தானாகவே அன்னோன் நம்பரில் இருந்து வரும் கால்களை அன்லாக் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இது மட்டும் அல்லாது மெசேஜ் எடிட் செய்யும் முறை முன்பே அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், தற்போது அனைத்து வகையான தொலைபேசி பயனாளர்களும் மெசேஜ் எடிட் ஆப்ஷனை பயன்படுத்த முடியும். இதன் மூலம் மெசேஜ் 15 நிமிடத்திற்குள் எடிட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பயனாளிகளின் பிரைவசியை உறுதி செய்யும் வகையில் குறிப்பிட்ட சாட்டுகளை லாக் செய்யும் சாட் லாக் முறை கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு WhatsAppஇல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சங்கள் பயனாளர்கள் கூடுதல் பயனடைய காரணமாக இருக்கும்.

 

Exit mobile version