Site icon Tamil News

iPhoneஇல் ஏற்படவுள்ள மாற்றம் – பயனாளர்களுக்கு முக்கிய தகவல்

iPhone கையடக்க தொலைபேசி யாருடன் அழைப்பில் இருந்தாலும் அதைத் துண்டிக்க, சிவப்புப் பொத்தான் ஒன்று இருக்கும் நிலையில் அதனை மாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக திரையின் கீழ்ப் பகுதியில், நடுவே அந்தப் பொத்தான் இருக்கும். எனினும் இனி அந்தப் பொத்தான், விரைவில் சற்றே இடம்மாறவுள்ளது.

மேம்படுத்தப்பட்ட iOS 17 மென்பொருளில், அழைப்புகளை நிறுத்தும் சிவப்புப் பொத்தான் (red end-call button) வலப் பக்கத்துக்கு நகர்த்தப்படும். தற்போது தனியாக இடம்பெறும் ‘அழைப்புகளை நிறுத்தும் பொத்தானுக்கு’ அருகே மற்ற சில பொத்தான்களும் இருக்கும்.

iOS 17 முன்னோட்ட வழிகாட்டியில் “Mute”, “Speaker” பொத்தான்களும் இடம் மாற்றப்படுமெனத் தெரிகிறது.

அந்த மாற்றத்துக்குப் பழகிக்கொள்ளச் சற்றுக் காலம் பிடிக்கும் என்று இணையவாசிகள் கருத்துரைத்துள்ளனர். எப்படியிருப்பினும், மென்பொருள் வெளியிடப்படுவதற்கு முன் கூடுதல் மாற்றம் கொண்டு வரப்படுமா என்பது தெரியவில்லை.

திருத்தப்பட்ட iOS 17 மென்பொருள் அடுத்த மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version